Hollandtamilan

Amazon ஊழியர்கள் 20,000 பேருக்கு கொரோனா..

அமெரிக்காவில் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 27 மாகாணங்களில் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை அமெரிக்காவில் 71 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்த 20,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த அமெரிக்க தொகையில் குறைவுதான். எங்களை போன்ற பெரிய நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அதன் எண்ணிக்கையை வெளியிட வேண்டும். இது மக்களுக்கும் அரசுக்கும் உதவியாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளது.