பிரிட்டன் பிரதமர் போரீஸ ஜான்சன் காதலிக்கு இன்று ஆண்குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது நலமோடு இருந்து அலுவலக பணியை துவக்கி உள்ளார் பிரிட்டன் பிரதமர் போரீஸ். 55 வயதான பிரதமர் , கேர்ரி சைமண்ட்ஸ் என்ற 32 வயது உடைய பெண்மணியை காதலித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகவும், விரைவில் குழந்தை பெற உள்ளோம் என்றும் சமூகவலை தளங்களில் பதிவிட்டனர் .
இந்நிலையில் இன்று லண்டனில் உள்ள அரசு மருத்துவ சேவை மையத்தில் கேர்ரிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவல் வெளியானதும் போரீசின் தந்தை ஸ்டான்லி ஜான்சன் தான் தாத்தா ஆனதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரிட்டன் உயர் அதிகாரிகள் பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.