Hollandtamilan

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஜோவிடன்(joe biden).

அமெரிக்க அதிபர் தேர்தல், வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசு கட்சி சார்பில், டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோவிடன் ஆகியோர்  போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், 1993-ல், (Capital ஹில் ) அலுவலக கட்டடத்தில் வைத்து, ஜோபிடன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, முன்னாள் செனட் ஊழியர் தாரா ரீட் என்பவர், குற்றச்சாட்டை எழுப்பி உள்ளார். அப்போது அவருக்கு 29 வயது. இப்போது 56 ஆகிறது. இது, அமெரிக்க தேர்தல் களத்தில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடனின் பிரச்சாரக் குழு இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அமெரிக்க அரசில் உயர் பொறுப்பில் இருக்கும் பெண்ணான சபாநாயகர் நான்சி வெலோசி, இவ்விவகாரத்தில் விடனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். விடன் மதிப்புமிக்க நபர். பெண்கள் உரிமைகளுக்காக போராடியவர். 27 ஆண்டுகளாக இது பற்றி யாரும் புகாரளிக்கவில்லை,” என கூறினார். இந்நிலையில் ஜோவிடன் முதல் முறையாக இக்குற்றச்சாட்டுக்கு தங்கள் தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சியில் தோன்றி  பதிலளிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது .