Hollandtamilan

தனது செல்லப்பிராணியுடன் விளையாடிய பைடனுக்கு நிகழ்ந்த விபரீதம்.

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் தனது செல்ல நாயுடன் விளையாடிய போது வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஜோ பைடன் நேற்று முன்தினம் இரவு தனது இரண்டு நாய்களில் ஒன்றான மேஜருடன் விளையாடும்போது அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பைடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் டெலாவேரின் நெவார்க்கிலுள்ள எலும்பியல் நிபுணரைச் சந்தித்ததாக அவரது அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ பைடனுக்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அவரது வலது காலின் கணுக்கால் பகுதியில் சிறியளவிலான காயம் ஏற்பட்டுள்ளதால் சில வாரங்களுக்கு அவருக்கு நடைப்பயிற்சி தேவைப்படும் என்றும் சிறப்புக் காலணி ஒன்றை அணிய வேண்டுமெனவும் மருத்துவர் ஓ கோனர் தெரிவித்தார்.

ஜோ பைடனின் தனிப்பட்டமருத்துவரின் கூற்றுப்படி, எக்ஸ்ரேவில் வெளிப்படையாக எலும்பு முறிவைக் காட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ‘மேஜர்’ என்ற இந்த நாயை பைடன் தத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.