Hollandtamilan

ஜெர்மனியில் முகமூடிகள் கட்டாயம் …லிம்பேர்க் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் கட்டாயம் .

திங்கள் முதல் ஜெர்மனியில் கடைகள் போன்ற பொது இடங்களில் முகமூடி அணிவது கட்டாயமாகும். எல்லையைத் தாண்டி கடைக்குச் செல்லும் லிம்பேர்க் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் கட்டாயம் முகமூடி அணியவேண்டும் .

Sittard எல்லையை கடந்து Germany சென்று கடைவலம் செய்தவர்கள் அனைவரும் முகமூடி அணிந்து சென்றனர் . லிம்பர்க்கைச் சேர்ந்த ஒரு பெண் கூறுகிறார். “நெதர்லாந்தில், இது இன்னும் கட்டாயமில்லை,

ஆனால் நான் இங்கு சில கொள்வனவு  செய்ய விரும்புகிறேன், அதனால் நான் விதிகளைப் பின்பற்ற வேண்டும்.” மேலும் ஒரு நபர் கூறுகையில்  அங்காடிகளின் விதிமுறையை மதிப்பதாக சொன்னார் .