சவுதி அரேபியாவில் இனி கசையடி தண்டனை வழங்கக்கூடாது என அந்நாட்டு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், பல்வேறு குற்றங்களுக்கு, கசையடி தண்டனை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மனித உரிமைகளை நிலைநாட்டும் வகையில், சவுதி அரசர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இனி கசையடி, தண்டனையாக வழங்கப்படாது’ என, அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தன் உத்தரவில் கூறியுள்ளது. இதற்கு பதிலாக சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.