Hollandtamilan

கோரமுகங்களை ஜெனிவாவில் பகிரங்கப்படுத்திய தமிழ் அதிகாரி

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 45 ஆவது கூட்டத்தொடரில் பாகிஸ்தானின் அத்தனை கோரமுகங்களையும் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியான எஸ். செந்தில்குமார் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் பாகிஸ்தானின் மனித உரிமை மீறல்களை சர்வதேச அரங்கில் தெளிவாக பட்டியலிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பாகிஸ்தானில் ஒவ்வொரு நாளும் ஆட்கடத்தல்கள், மிரட்டல்கள், ரகசிய தடுப்பு முகாம்கள், சித்திரவதைகள், காணாமல் போதல் ஆகியவை தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறான கொடூரமான மனித உரிமை மீறல்களை பாகிஸ்தான் அரசாங்கம் நேரடியாக செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய மனித உரிமை மீறல்கள் அங்கு அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

பாகிஸ்தானில் தடுப்பு காவலில் இருந்த காஷ்மீர் இன மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்து, கிறிஸ்தவ சிறுமிகள் பாகிஸ்தானில் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன.

பத்திரிகையாளர்களான மர்வேய்ஸ் சர்மா, அகமது நூரானி, புகாரி உள்ளிட்டோர் பாகிஸ்தானில் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் சமூக செயற்பாட்டாளர் இத்ரிஸ் காணாமல் போய் 9 மாதங்கள் ஓடிவிட்டன. அவரது கதி என்ன என்று தெரியவில்லை.

ஆனால் இந்தியா குறித்து பொறுப்பே இல்லாமல் அவதூறுப் பிரசாரங்களை மேற்கொண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவையே திசை திருப்ப முயற்சிக்கிறதென அவர் தெரிவித்துள்ளார்.