Hollandtamilan

கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி

கொரோனா வைரஸ் தொடர்புடைய வாசனையை வைத்து, கொரோனாவை நாயால் கண்டுபிடிக்க முடியுமா என்பது குறித்து லேப்ரடர் இன நாய்களுக்கு பென்சில்வேனியா பல்கலையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்ற பயிற்சி, லண்டனில் உள்ள பல்கலை ஒன்றிலும் நடந்து வருகிறது. இதற்கு முன்னர், மனிதர்களுக்கு மலேரியா தொற்று குறித்து அறிய பயிற்சி நடந்தது.

இந்த சோதனை வெற்றி பெறும் பட்சத்தில் நாய்கள் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும். விமான நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு வருபவர்களை கண்காணிக்கும். கொரோனாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாய்கள் வெற்றி பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உணவு, வெடிமருந்துகள் மற்றும் கெட்டு போன உணவுகளை மட்டும் அல்லாமல், நோய் தொற்றை கண்டுபிடிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.