சீனாவிலிருந்த பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் அதிக உயிர் பலியை சந்தித்து வருகின்றன. உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையை அமல்படுத்தி உள்ளதால், பொருளாதாரமும் அதள பாதாளத்துக்கு சென்று விட்டது.
ஆனால் சீனா இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. அங்கு சுற்றுலா தளங்கள், பேரங்காடிகள் , உணவுவிடுதிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளும் செயல்படத் துவங்கி உள்ளன. இதனால் சீன பொருளாதாரம் சீரடைய துவங்கி உள்ளது.
இந்நிலையில் சீனா எண்ம நாணயத்தை அறிமுகம் செய்யவுள்ளது. அந்நாட்டின் மத்திய வங்கிகள் ஒன்றிணைந்து எண்ம நாணயமுறையை அறிமுகப்படுத்த உள்ளன. இதனை வங்கி அளிக்கும் தனி பணப்பை ஒன்றில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அந்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் தொழிற்சாலைகள் கடைகள் அனைத்தும் இப்பயன்பாட்டை துவங்கியதும் இதனை மெல்ல விரிவுபடுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளது.
எண்ம நாணய திட்டத்தை வருடமாக ரகசியமாக தீட்டிய சீனா தற்போது அதனை நிறைவேற்றி உள்ளது. உலக நாடுகளில் மின்காசு பயன்பாடு இருந்தாலும் ஒரு நாட்டு வங்கியே அதிகாரபூர்வமாக எண்ம நாணயத்தை வெளியிடுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.