Hollandtamilan

ஊரடங்கு நேரத்தில் வரும் அன்னையர் தினம் !!!!!!

வெளியே சென்று கொண்டாட முடியவில்லை என்று வருத்தப்படாமல் சிறியசெயல்களின் மூலம் மிகுந்த சந்தோஷத்தை அம்மாவுக்குத் தந்து இந்த அன்னையர் தினத்தை மறக்கமுடியாத வகையில் கொண்டாடுவோம்.

மே 10 – நாளை அன்னையர் தினம். மழலை கொஞ்சும் தமிழில் நாம் அனைவரும் அழைத்த முதல் உறவு அம்மா ஆகும்  அம்மாவைத்தான். ஆயிரம் உறவுகளை நம் வாழ்க்கையில் கடந்தாலும் புகழின் உச்சிக்கு சென்றாலும் அமைதியாய் வெற்றிக்கு காரணம் என்னவென்று ஒரு கணம் சிந்தித்தால் அம்மாவின் முகமே நினைவுக்கு வரும். அம்மாவைச் சிறப்பிக்கும் விதமாக 1914 -ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் தொடங்கி பல்வேறு நாடுகளில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உறவுகளுக்கிடையே உள்ள நெருக்கத்தை அதிகரிக்கவே உறவுகளின் பெயரில் தினங்களைக் கொண்டாடி வருகிறோம். கொண்டாட்டம் என்றாலே பரிசு கொடுத்து மகிழ்விப்பது என்பது காலம் காலமாக நாம் பின்பற்றிவரும் வழக்கமாகும். அந்த வகையில் அன்னையர் தினத்தை, இந்த ஊரடங்கு  நேரத்தில் அம்மாக்களுக்கு எந்த மாதிரியான பரிசுகளைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி அனைவருக்கும் ஒரு குழப்பம் இருக்கும்.