இங்கிலாந்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் மார்ச் மாதம் வரை செல்ல வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார் பிரித்தானிய கேபினட் அலுவலக அமைச்சர்.அடுத்த ஏழு வாரங்களுக்குள் 13 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன்.ஆனால், அப்படி சரியாக திட்டமிட்டபடி தடுப்பூசி போடப்படவில்லை என்றால், போரிஸ் ஜான்சன் அறிவித்தபடி பொதுமுடக்கம் பிப்ரவரி மாத இறுதியில் விலக்கிக்கொள்ளப்படாமல், மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படலாம் என பிரித்தானிய கேபினட் அலுவலக அமைச்சரான Michael Gove இன்று எச்சரித்துள்ளார்.
புதிய கொரோனா வைரஸ் பயங்கரமாக பரவி வரும் நிலையில், இப்போது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் அபாயம் உள்ளது என்பதால், மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது போன்ற ஒரு பொது முடக்கத்தை அறிவிக்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளானார் போரிஸ் ஜான்சன்.