Hollandtamilan

அமெரிக்காவில் உணவு தட்டுப்பாடு; இறைச்சி பதப்படுத்தும் நிலையங்களை திறக்க உத்தரவு.

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த, அமெரிக்காவில் அமுலில்  உள்ள ஊரடங்கு மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக, மாகாண ஆளுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால், அங்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், அமெரிக்க மக்களுக்கு உணவு வழங்கல் தடைபடாமல் இருக்க, இறைச்சி பதப்படுத்தும் நிலையங்களை திறந்து வைக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

டிரம்ப்பின் உத்தரவை அந்நாட்டு மக்கள் வரவேற்றுள்ளனர். ஆனால், உணவு பதப்படுத்தும் நிலையங்களில் பணியாற்றும் 3,300 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; அதில், 20 பேர் பலியாகி உள்ளதால், உணவு பதப்படுத்தும் நிலையங்களை திறக்கும் அரசின் முடிவுக்கு ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.