ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலிருந்து சுமார் 2,500 இராணுவ வீரர்களை திரும்பப் பெற பென்டகனுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ட்ரம்பின் இத்திடீர் தீர்மானம் தவறான முடிவாக இருக்கும் என பென்டகனின் முன்னாள் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவிய ட்ரம்ப், பல்வேறு நாடுகளில் இருந்தும் அமெரிக்க படைகளை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகின்றன.
இதன் முதற் கட்டமாக ஆப்கானிஸ்தானிலிருந்து 4,500 முதல் 2,500 இராணுவ வீரர்களை திரும்பப் பெற ட்ரம்ப் திட்டமிட்டு வருகிறார் எனவும்,ஈரானிலிருந்தும் ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் தமது படைகளை திரும்பப் பெற ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.