Ziggo இணையவழங்கி நிறுவன உரிமையாளரும் Liberty Global நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியுமான John Malone அவருக்கு சொந்தமான Virgin Media மற்றும் o2 ஆகிய இணையவழங்கி நிறுவனங்களை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார் .
இந்த இணைப்பு இங்கிலாந்து தொலைத் தொடர்புத் துறையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இந்த ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்க கோடிஸ்வரர் John Malone பிரித்தானியா இணையவழங்கி நிறுவனங்களுடன் மோதலுக்கு தயாராகிறார் .
சுமார் 35 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் Virgin மற்றும் o2 ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பு ஐரோப்பாவின் மிகப்பெரிய இணைய வழங்குநர்களில் ஒருவராக மாற்றும். நெதர்லாந்திலும் இதேபோன்று Vodafone Ziggo இணைந்து சேவை வழங்குகின்றன . இந்த கூட்டு முயற்சி டச்சு கேபிள் மற்றும் தொலைத் தொடர்பு சந்தையில் மிகப் பெரிய நிறுவனமாக ஓங்கி நிற்கிறது .