Hollandtamilan

Tinte இல் கடும் சூறாவளியால் பசுமைக்குடில்(Greenhouse) ஒன்று சேதமடைந்து ஐந்து பேர் காயமடைந்தனர்.

தெற்கு ஒல்லாந்து  தீவான voorne-putten னில் உள்ள Tinte யில், பல பசுமைக்குடில்கள்  நேற்று  காலை ஒரு சூறாவளியால் கடுமையாக சேதமடைந்தன.

இதில் ஒரு பசுமைக்குடிலில் வெள்ளரி அறுவடை செய்துகொண்டிருந்த ஐந்து பேர் காயமடைந்தனர் . நேற்று சுமார் ஏழு மணியளவில் கடும்  சூறாவளி வீசியதால் பசுமைக்குடில்கள்  பாதிக்கு மேல் சேதமடைந்தன  வெள்ளரி (komkommer)நிறுவனத்தின் உரிமையாளர் (Arthur van Geest) பிராந்திய ஒளிபரப்பாளரான Rijnmondடிற்கு கூறுகிறார்.

இது ஒரு மதிப்பீடாகும். காப்பீட்டு நிறுவனத்தின் வல்லுநர்கள் இன்னும் விசாரித்து வருகின்றனர். உடல்காயங்கள் பெரிதாக இல்லை என வெள்ளரிக்காய் விவசாயி கூறினார் . நாங்கள் ஒரு பாதையில் வெள்ளரி  அறுவடை செய்து கொண்டிருந்தோம், திடீரென்று ஒரு பெரிய சத்தம் கேட்டது, அது ஆலங்கட்டி மழை போல் இருந்தது .

அது மிக விரைவாக முடிந்தது என்று வெள்ளரி அறுவடை செய்த சிலர் கூறினார்கள் . இப்பகுதியில் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சேதம் எவ்வளவு என்று  தெளிவாகத் தெரியவில்லை.