Ter Apelஅகதி முகாமில் இனி தரையில் தூங்கவேண்டிய அவசியமில்லை .
Groningen னில் உள்ள Ter Apelஅகதி முகாமில் அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களும் மீண்டும் ஒரு படுக்கை அல்லது மெத்தையில் தூங்கலாம். சமீபத்திய நாட்களில் மையத்தில் உள்ள டஜன் கணக்கான மக்களை தரையில் தூங்கவேண்டி இருந்தது . அகதிகளுக்கான டச்சு கவுன்சில் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை கொண்டு வந்தது .
புகலிடம் கோருவோரின் வரவேற்புக்கான மத்திய நிறுவனம் (COA) இப்போது ஒரு அவசர கூடாரத்தில் படுக்கைகள் மற்றும் மெத்தைகளை வழங்கியுள்ளது. அகதிகளுக்கான டச்சு கவுன்சிலைப் பொருத்தவரை, இது ஒரு அவசரகால தீர்வாகும்,
இதன்பின் மக்கள் வழக்கமான முகாமிற்கு செல்ல வேண்டும். ஐரோப்பாவில் பல்வேறு பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா நெருக்கடியின் போது நெதர்லாந்திற்கு வந்த புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.
இதையடுத்து, விண்ணப்ப மையத்தில் குறைந்த அளவில் ஊழியர்கள் பணியில் நிறுத்தப்பட்டனர். ” ஆனால் மறுபடியும் புகலிட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது . இதனால் மக்கள் தரையில் தூங்க வேண்டியிருந்தது என்பதையும் புரிந்துகொள்ளமுடியவில்லை ”என்று அகதிகளுக்கு வழிகாட்டும் அமைப்பு கூறுகிறது.