SNS வங்கி Hema பேரங்காடிகளில் உள்ள அணைத்து பணப்பொறிகளையும் உடனடியாக மூடவுள்ளது . பணப்பொறிகள் பெரும்பாலும் வெடிவைத்து தகர்த்து திருடப்படுகின்றன இதனால் Hemaஇல் உள்ள அணைத்து பணப்பொறிகளையும் Sns வங்கி மூட விரும்புகிறது.
SNS வங்கி உரிமையாளரான De Volksbank திங்கள்கிழமை காலை Lisse ல் உள்ள ஒரு Hema கிளையில் பணப்பொறி வெடிவைத்து தகர்த்து கொள்ளையடித்த பின்னர் இந்த முடிவை எடுத்தார். 200 பணப்பொறிகளும் , மூடப்பட்டு உடனடியாக அகற்றப்பட்டன .
RegioBank உம் தனது பணப்பொறிகளை அணைத்து Spaar பேரங்காடிகளில் இருந்தும் அகற்றியது . பணப்பொறிகளை வங்கிகள் அகற்றுவது இது முதல் தடவை கிடையாது .சென்ற ஆண்டு இறுதியில் ABN-AMRO தனது பணப்பொறிகளையும் அகற்றியது குறிப்பிடத்தக்கது .