Roermond இல் வடிவமைப்பாளர் அங்காடிகள் கொரோனா நெருக்கடி காரணமாக 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஏற்கனவே வேலை இழந்துவிட்டனர்.
விற்பனை நிலையங்கள் ஆறு வாரங்களுக்கு முன்பு லிம்பர்க் வடக்கு பாதுகாப்பு பிராந்தியத்தின் உத்தரவின் பேரில் மூடப்பட்டுள்ளது . முக்கியமாக தற்காலிக ஒப்பந்தங்கள் அடிப்படையில் வேலை பார்த்த ஊழியர்கள் தமது வேலையை இழந்துள்ளார்கள் என கடை மேலாளர்களுக்கு காணொளி செய்தியில் இயக்குனர் (Gompel) கூறினார் .
கடை உரிமையாளர்கள் N.O.V (Noodmaatregel Overbrugging Werkgelegenheid )திட்டத்தில் உரிமை கோர முடிந்ததால், நிரந்தர ஒப்பந்தத்துடன் பணியாளர்களை பணிநீக்கம் செய்வது தற்போதைக்கு ஒத்திவைக்கப்படலாம். ஆனால் கடைகளை விரைவாக மீண்டும் திறப்பது முக்கியம் என்று Gompel வலியுறித்தினார்.