Hollandtamilan

Parkstadடில் உள்ள சில பாடசாலைகளில் வாய் கவசம் கட்டாயம் .

Parkstadடில் உள்ள சில பாடசாலைகளில்  வாய் கவசம் கட்டாயம் . நெதர்லாந்தின்  தெற்கில், புதிய பள்ளி ஆண்டு அடுத்த வாரம் தொடங்குகிறது, Parkstad பிராந்தியத்திலும், மாணவர்களும் ஆசிரியர்களும் பாடசாலையில் முககவசம்  அணிய வேண்டும் என்று பாடசாலை நிர்வாகங்கள்  முடிவு செய்கின்றன.

Parkstad Limburg தொழில் பயிற்சி  கல்லூரியில்  நடைமுறை பயிற்சி  பாடங்களுக்கான வகுப்பின் போது முககவசங்கள்  அணிவது அவசியமாகும் . அங்கு மாணவர்களும் ஆசிரியர்களும் ஒருவருக்கொருவர் 1.5 மீட்டர் தூரத்தை கடைபிடிக்க  முடியாது.தொழில்முறை கல்லூரிக்கு  Kerkrade, Heerlen மற்றும் Landgraaf  ஆகிய இடங்களில் கிளைகள்  உள்ளன.

நெதர்லாந்தின் வடபகுதியில்  புதிய பாடசாலை  ஆண்டு ஏற்கனவே இந்த வாரம் தொடங்கியது. அங்கேயும், சில பாடசாலைகளில்  முககவசம்  கட்டாயம் அணியவேண்டும் . மத்திய நெதர்லாந்தில் , மாணவர்கள் ஆகஸ்ட் 31 அன்று மீண்டும் பாடசாலைக்கு  செல்வார்கள்.