Maastrichtசில் உள்ள தாதவன் உணவகம் 1.5 மீட்டர் தூர விதிக்கு உத்தரவாதம் அளிக்க இயந்திர மனிதர்களை பயன்படுத்துகிறது. Maastricht, Eindhoven மற்றும் Arnhem ஆகிய இடங்களில் கிளைகள் உள்ள ஆசியா உணவகமான தாதவன் கொரோனா நடவடிக்கை காரணமாக சில மாதங்கள் மூடியிருந்தது .
தற்பொழுது கொரோனா நடவடிக்கைகளுக்கு இசைவாக உணவு பரிமாறும் பணிக்கு இயந்திர மனிதர்களை அமர்த்தியுள்ளது . உணவகத்தில் போதிய பணியாளர்கள் இல்லாமை காரணத்தாலும் 1.5 மீட்டர் தூரத்தை சரியாய் கடைப்பிடிக்கவும் தாங்கள் இயந்திர மனிதர்களை பாவிப்பதாக உணவக மேலாளர் Paul Seijben கூறினார் .
ஒரு சிறிய இயந்திர மனிதன் நுழைவாயிலில் நின்று உடல் வெப்பநிலையை அளவிடுகிறது. வெப்பநிலை 38 டிகிரிக்குக் குறைவாக இருக்கும்போது, விருந்தினர்ககள் அனுமதிக்கப்படுவார்கள். நீங்கள் முற்பதிவு செய்த உணவுகளை , இயந்திர மனிதர்கள் அட்டவணைபடி வழங்குவார்கள் . இந்த இயந்திர மனிதர்களால் கணக்கு எழுதவோ அல்லது அரட்டை அடிக்க முடியாது என்பது வருத்தமான செய்தி .