நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் Maastrichtச்சில் உள்ள Vrijthof இல் நடந்த கொரோனா எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எதிர்ப்பாளர்கள் கொரோனா நடவடிக்கைகளை புறக்கணித்து, போதுமான சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்தால், காவல்துறையினரும் அதிரடி காவல்துறையினரும் மாலை 3:15 மணியளவில் தலையிட்டு பங்கேற்பாளர்களை சதுக்கத்தில் இருந்து வெளியேற்றினார்கள்.
சுமார் 200 ஆர்ப்பாட்டக்காரர்கள் மதியம் 2 மணி முதல் Vrijthof பில் கூடினார்கள் . இது கொரோனா நடவடிக்கைகளுக்கு எதிராக அறிவிக்கப்படாத ஆர்ப்பாட்டமாகும். ஒரு ஒலிபெருக்கி மூலம் ஐந்து அடி சமூக இடைவெளியில் கூடுமாறு பொலிசார் போராட்டக்காரர்களை எச்சரித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் இதை செவிசாய்க்கவில்லை. காவல்துறையினர் மக்களை சதுக்கத்திலிருந்து விரட்டியபோது, பங்கேற்பாளர்களில் சிலர் “சர்வாதிகாரம்” என்று கூச்சலிட்டபடி கலைந்து சென்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள்பெரும்பாலும் தெற்கு லிம்பர்க்கில் இருந்து, குழந்தைகளுடன் குடும்பமாக வந்திருந்தனர். Maastrichtஇல் அவசரகால சட்டம் அமுலில் இருப்பதால் காவல்துறையினர் அவ்வப்போது பங்கேற்பாளர்களின் அடையாள அட்டையை சோதனை செய்தனர்.