கொரோனாவின் தாக்கம் கடுமையாக உள்ளத்தால் Lockdown மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்படும் .தொழில்முனைவோருக்கான மானியத்தை செயல்படுத்த அமைச்சரவை செயல்பட்டு வருகிறது. Lockdown டிசம்பர் நடுப்பகுதியில் ஆரம்பித்து ஜனவரி 19 வரை அறிவிக்கப்பட்டது, ஆனால் பிரதமர் Mark Rutte சமீபத்திய காலங்களில் கொரோனா அதி வேகமாக பரவி வருவது நம்பிக்கையைத் தரவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கைகளின் நீட்டிப்பு செவ்வாய்க்கிழமை மாலை, Rutte மற்றும் சுகாதார மந்திரி De Jonge ஆகியோரின் செய்தியாளர் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி மானியத்தின் பெரும்பகுதி கடினமான பாதிப்புகளை சந்தித்த, நீண்ட காலமாக தங்கள் வணிகத்தை மூடிவிட்ட . உணவக உரிமையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் . டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டுள்ளன.
