டச்சு உணவு மற்றும் நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் மற்றும் தேசிய விலங்கு பாதுகாப்பு ஆய்வாளர் ஆகியோர் மத்திய லிம்பர்க்கில் ஒரு வளர்ப்பவரிடமிருந்து 79 நாய்களை பறிமுதல் செய்துள்ளனர்.
நோய்வாய்ப்பட்ட நாய்கள் மற்றும் மோசமான நிலையில் உள்ள பண்ணை பற்றிய முறையீட்டை தொடர்ந்து பிப்ரவரி 16 அன்று ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சோதனையில், நாய் வளர்ப்பவர் பல்வேறு இனத்தை சேர்ந்த சுமார் 120 நாய்கள் மற்றும் நாய்க்குட்டிகளை வளர்ப்பது தெரியவந்தது.நாய்களுக்கான பண்ணை மிக மோசமான நிலையில் இருந்தது மட்டுமல்லாமல், நாய்களின் ஆரோக்கியமும் மோசமாக இருந்தது. உதாரணமாக, ஒரு கால்நடை மருத்துவரால் சிகிச்சையளிக்கப்படாத ஒரு கடிபட்ட நாய் காயங்களுடன் சுற்றி நடப்பதை ஆய்வாளர்கள் கண்டனர்.
நாய்கள் மிகவும் சிறிய மற்றும் வெப்பம் இல்லாத அறையில் அடைக்கபட்டிருந்தன. நாய் வளர்ப்பவருக்கு எதிராக அதிகாரப்பூர்வ அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், நாய்ப் பண்ணையை மேம்படுத்த அறிவுறுத்தல் வழங்கபட்டுள்ளது . விரைவில் இரண்டாவது ஆய்வு நாய் வளர்ப்பவரிடம் நடைபெறும். வசதிகள் இன்னும் ஒழுங்காக இல்லாவிட்டால், மற்ற நாய்களும் எடுத்துச் செல்லப்படும். மேலும், நாய்கள் அழைத்துச் செல்லும் செலவுகளையும் நாய் வளர்ப்பவர் செலுத்துவேண்டும். நாய்களில் சட்டவிரோத வர்த்தகம் அதிகரித்து வருவதாக NVWA தெரிவித்துள்ளது.