செவ்வாய்க்கிழமை அன்று Landgraaf Lindestraat இல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
அதிகாலை 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ தொடங்கிய அடுக்குமாடி குடியிருப்பைத் தவிர, மேலும் நான்கு குடியிருப்புகள் தீ விபத்தில் சேதமடைந்துள்ளன. தீ விபத்துக்கான காரணம் குறித்து Landgraaf காவல்துறையினர் புலன்விசாரனை செய்து வருகின்றனர்.காயப்பட்ட வர்களின் தகவல்களை காவல்துறையினர் தெரிவிக்கவில்லை .