Hollandtamilan

Hoensbroek இல் அட்டகாசம் செய்யும் இரண்டு ஆயுதக் கொள்ளையர்கள் .

வெள்ளிக்கிழமை மாலை Amstenraderweg கில் ஒரு வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பான விசாரணையில் காவல்துறையினர் சாட்சிகளைத் தேடுகின்றனர். மாலை 6 மணியளவில், இக் கொள்ளை குறித்து புகார் கிடைத்ததின் படி கொள்ளையர்கள் குடியிருப்போரை ஆயுதத்தை காட்டி அடித்து  மிரட்டியதாகவும் பின்னர் தப்பி ஓடிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது .

பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்கள் . காவல்துறையினர் வீட்டிலும் சுற்றிலும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.கொள்ளை பற்றிய தகவல் தெரிந்தால்  0900 – 88 44 க்கு புகாரளிக்கவும். உங்களிடம் ஏதேனும் புகைப்படங்கள் அல்லது நிகழ் படங்கள் இருந்தால், அவற்றை www.politie.nl/upload வழியாக பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.