Hilversum மில் உள்ள Beresteinseweg ஒரு காவல்துறை அதிகாரி ஒரு சந்தேக நபரை சுட்டுக் கொன்றார். சுடப்பட்ட பின்னர் அந்த நபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இறந்த நபரின் அடையாளம் இன்னும் அறியப்படவில்லை. காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில் சந்தேக நபர் ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது இன்னும் தெரியவில்லை என கூறினார் காவல்துறையினர் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து ஒரு உலங்குவானூர்தியையும் அனுப்பியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு குறித்து மாநில விசாரணை சேவை விசாரணை நடத்தி வருகிறது.