Hollandtamilan

Heerlen Zandweg இல் ஏற்பட்ட மோதலை தடுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை துப்பாக்கி சூடு .

Heerlen Zandweg இல் ஏற்பட்ட மோதலை தடுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை துப்பாக்கி சூடு . செவ்வாய்க்கிழமை மாலை, ஹெர்லனில் உள்ள Zandweg கில் ஒரு வீட்டில் நடந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தவேண்டி இருந்தது .

எச்சரிக்கை துப்பாக்கி சூட்டின்  விளைவாக யாரும் காயமடையவில்லை, ஆனால் மோதலின் விளைவாக. இருவர் காயமடைந்தனர் . மாலை 6 மணியளவில் Zandweg கில் உள்ள ஒரு வீட்டில் மோதல் ஏற்பட்டது. ஆயுதங்களுடன் பயங்கரமாக இருவர் மோதிக்கொண்டனர் . இறுதியில் காவல்துறையினர் மோதலை தடுப்பதற்காக  எச்சரிக்கை துப்பாக்கி சூடு நடத்த வேண்டியிருந்தது.அந்த எச்சரிக்கை துப்பாக்கி சூடு விளைவாக யாரும் காயமடையவில்லை. இருப்பினும், மோதலின் விளைவாக சம்பந்தப்பட்ட இருவர் காயமடைந்தனர்.

தேவையான மருத்துவ சிகிச்சைக்காக காயமடைந்த இருவரையும் காவல்துறையினர்  ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மோதலுக்கான காரணம் குறித்து மேலும் தெளிவு பெற காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.