Hollandtamilan

Heerlen woningsdag இல் குடியிருப்புகளுக்கு சிறப்பு திட்டம்.

இந்த ஆண்டு Koningsdag இல்லை, ஆனால் ஏப்ரல் 27 திங்கள் அன்று Woningsdag எல்லோரும் வீட்டிலோ அல்லது முற்றத்திலோ  பாதுகாப்பாக செய்யக்கூடிய செயல்களுடன். heerlen மைய அமைப்பு ,எனது நகரம் ஆகியவை ஒன்றிணைந்து  குழந்தைகளுக்கு சவாலான போட்டிகளையும் கைவினை போட்டிகளையும் நடத்தின .

எனது நகரம் Heerlen ,Heerlen வாசிகள் அனைவரையும் நீளமான ஆரஞ்சு நிற மாலைகளால் தங்களை இணைத்து கொள்ளும்படி கேட்டிருந்தது . அரசர்  தினமான ஏப்ரல் 27 அன்று, Heerlen எனது நகரம்  ஒரு கைவினை  காணொளியை Amber Delahaye என்ற  முகநூல்  பக்கம் வழியாக 11:00 மணிக்கு ஒளிபரப்பியது .அந்த கானொளியில் வீட்டில் ஒரு மாலை மற்றும் கிரீடம் தயாரிப்பதற்கான அனைத்து செயல்முறை விளக்கமும்  பதிவிட்டுள்ளார்கள் .

குழந்தைகளின் கைவினை திறமைகளை புகைப்படம் எடுத்து அதை woningsdagheerlen Heerlenmijnstad  முகவரிக்கு அனுப்பி பரிசினை வெல்லலாம் .