Hollandtamilan

Heerlen னில் உள்ள Geleenstraat டில் உள்ள துணிக்கடையில் முன்வாசல் கண்ணாடியை உடைத்து துணிகர திருட்டு

செவ்வாய் அதிகாலை  Heerlen னில் உள்ள Geleenstraat டில் உள்ள ஒரு துணிக்கடையில் ஒரு துணிகர திருட்டு நடந்தது.அதிகாலை 3:45 மணியளவில் குறைந்தது மூன்று திருடர்கள்  துணிக்கடையின் முன்  ஜன்னலை உடைத்து கடைக்குள் நுழைந்தார்கள்.

திருடர்கள் அங்கிருந்த விலை மதிப்புமிக்க அணைத்து  அளவிலான ஆடைகளையும் திருடி சென்றனர் . திருடர்கள் Volkswagen Golf காரில்  Geleenstraat முதல்  Geerstraat வரை சென்று பின்னர்  Schakelweg. வழியாக தப்பிசென்ற்றனர் .

இத்திருட்டு சம்பவத்தை 03:45 மணியளவில் Heerlenனில் உள்ள Geleenstraat அருகிலோ அல்லது அருகிலோ எதையாவது பார்த்த சாட்சிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருடர்கள் காரில் தப்பி ஓடியதை பார்த்தவர்கள் அல்லது இத்திருட்டு சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 0900-8844 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என Heerlen காவல்துறையினர் கேட்டுகொள்கின்றனர்.