Heerlen காவல்நிலையத்தில் புதையல் தேடும் நபரால் ஒப்டைக்கபட்ட நிலக்கண்ணிவெடியால் காவல்நிலையத்தில் வேலைபார்த்த அனைவரும் வெளியேற்றபட்டனர் .
நேற்றிரவு Heerlen Stationsstraat இல் அமைந்துள்ள உள்ள காவல் நிலையத்தை ஓரளவு வெளியேற்றுவதற்கு Heerlenனைச் சேர்ந்த ஒரு புதையல் தேடுபவர் தான் காரணம் என்று தெரியவந்தது . சிறந்த நோக்கங்களுடன், அவர் கண்டறிந்த ஒரு கண்ணிவெடியை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி காவல்நிலையத்தில் ஒப்படைத்ததால் Heerlen காவல்நிலையத்தில் சிறிது நேர பரபரப்பிட்க்கு பின்னர் கண்ணிவெடி நிபுணர்கள் வருகைதந்தர்கள் கண்ணிவெடியை வேறு இடத்திற்க்கு எடுத்துசென்று வெடிக்கவைத்தார்கள்.
.Heerlenஇல் வசிக்கும் Wesly என்பவர் நேற்று இரண்டாம் உலகப் போரில் புதைக்கப்பட்ட கண்ணிவெடியை தனது உலோக உணர்வி மூலம் கண்டுபிடித்தார். கண்ணிவெடியை தனது இல்லத்தில் வைத்திருப்பது ஆபத்து என உணர்ந்த Wesley அக்கண்ணிவெடியை Heerlen காவல்துறைக்கு எடுத்து சென்றார் என்று நேற்று இரவு RTL செய்தி நிறுவனத்திடம் கூறினார். புதையல் வேட்டைக்காரன் வெடிபொருளை ஒரு துண்டில் போர்த்தி, அதை ஒரு நெகிழிப்பையில் போட்டு, தனது துள்ளுந்தில் Heerlen Stationsstraat இல் அமைந்துள்ள உள்ள காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தான்.
அவரது அறிவிக்கப்படாத வருகையால் காவல்துறையினர் மகிழ்ச்சியடையவில்லை. இது அவரது முதல் கண்டுபிடிப்பு அல்ல, ஏற்கனவே Wesley150 மில்லிமீட்டர் நீண்ட தூர துப்பாக்கி மற்றும் 440 மில்லிமீட்டர் கையெறி குண்டு ஆகியவற்றைக் கண்டெடுத்துள்ளார்.அடுத்த முறை எதாவது கண்டுபிடித்தால் முதலில் காவல்துறைக்கு தகவல் சொல்லிவிட்டு அதன் பின்னர் தான் வரவேண்டும் என்று காவல்துறையினர் அன்பாக கூறினார்கள் .