Hollandtamilan

Heerlenனில்கத்தியால் குத்தியதற்காக மனிதன் கைது செய்யப்பட்டான்.

Heerlenனில்கத்தியால் குத்தியதற்காக மனிதன் கைது செய்யப்பட்டான். Heerlen னைச் சேர்ந்த 38 வயது நபர் ஒருவர் தனது சொந்த ஊரில் கத்தி குத்து  சம்பவத்திற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் Klompstraat டில் உள்ள  தங்குமிடதில்  வசிப்பவர் சிறு  காயமடைந்தார்.

குத்து காயமடைந்தவர் முதலில் ஆரம்பத்தில் Leger des Heils ஆர்மியின் பகல்நேர பராமரிப்பு மற்றும் இரவு பராமரிப்பு மையமான de klompபிற்கு குத்தப்பட்ட காயத்துடன் புகார் அளித்தார், அதன் பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பிவைகப்பட்டார் .   இரவு 7:00 மணியளவில் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட நபர் தனது நண்பரிடம் தனக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் .. அந்த வாய்ச்சன்டையின்  போது, ​​அவர் தன்னை கத்தியால் குத்தியதாகவும் கூறினார் . அறிக்கையின் பின்னர், Spoorsingelலில் 38 வயது சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்தனர் ..