Den Haag நகரபிதா Remkes உத்தரவின் பேரில் Den Haag.மத்திய புகையிரத நிலையத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திற்கும் மேற்பட்ட சுய ஊரடங்கு எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர் .200 சுய ஊரடங்கு எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர் .
ஆர்ப்பாட்டம் நகராட்சிக்கு அறிவிக்கபடாமல் தொடங்கியதால் நகரபிதா Remkes பாதுகாப்பு காரணங்களுக்காக, Malieveld அருகில் உள்ள Koekamp இல் 1.5 மீட்டர் இடைவெளியை பின்பற்றி ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி வழங்கினார். நகராட்சியின் கூற்றுப்படி, ஆர்ப்பாட்டக்காரர்கள் நியமிக்கப்பட்ட இடங்களில் அவர்களது எதிர்ப்பை தெரிவிக்காமல் வேறு இடங்களுக்கும் சென்றதால் அவர்களை கலைக்க , நகரபிதா Remkes நடவடிக்கை எடுத்தார் .
Denhaag மத்திய நிலையத்தில் சுமார் ஐம்பது ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள் HTM போக்குவரத்து நிறுவன பேருந்துகளில் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். எல்லோரும் ஒன்றரை மீட்டர் இடைவெளியில் இருக்க பல பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் உள்ள அமைப்பைத் தொடர்பு கொள்ள முன்கூட்டியே முயற்சித்ததாக Denhaag நகராட்சி கூறுகிறது, ஆனால் அது பலனளிக்கவில்லை. ஆர்ப்பாட்டங்கள் பொதுவாக முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும், இதனால் பாதுகாப்பு போன்ற விஷயங்கள் விவாதிக்கப்படலாம்.