பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால் பல இன்னல்களை பிரித்தானியா மக்கள் சந்தித்து வருகிறார்கள் .பிரெக்சிட்டுக்காக போராடிய பிரதமர் boris jonsan முதலான அரசியல்வாதிகளுக்கு பிரெக்சிட் என்ன பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதோ தெரியாது.ஆனால், அன்றாடம் வேலை செய்யும் சாரதிகள் முதலானோர் கடும் மன உளைச்சலுக்குள்ளாக்கப்படுகிறார்கள்,
பிரெக்சிட்டால் கடுப்படைந்துள்ள நாடுகள் அடிமட்ட தொழிலாளர்களை கஷ்டப்படுத்தி வருகின்றன. பிரித்தானிய லொறி சாரதி ஒருவரை பிரெக்சிட் சட்டங்களை மீறி உணவு பொருட்களை கொண்டு வந்ததால் ,நெதர்லாந்து பொலிசார், அவரது மதிய உணவை பறிமுதல் செய்தனர் . நெதர்லாந்துக்குள் நுழைந்த பிரித்தானியா லொறி சாரதி ஒருவரின் சாண்ட்விச்சை சோதிக்கும் நெதர்லாந்து எல்லை அதிகாரி ஒருவர், அதில் இறைச்சி இருப்பதால், அதை பறிமுதல் செய்வதாக கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் வைரஸ் பரவலை தடுக்க நெதர்லாந்து அதிகாரிகள் விழிப்புடன் இருப்பதை இச்சம்பவம் காட்டுகிறது . பிரெக்சிட்டுக்குப் பிந்தைய விதிமுறைகளின்படி, பால் பொருட்கள் மற்றும் இறைச்சியை பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் கொண்டு செல்ல தடை என்பது பிரித்தானியா சாரதிகள் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை .சட்ட விதி முறைகளை பின்பற்றி தாங்கள் தங்கள் கடமையை செய்வதாக நெதர்லாந்து அதிகாரிகள் கூறினார்கள் .