Hollandtamilan

Aken மற்றும் Landgraaf இல் இடம்பெற்ற கொள்ளைக்கு 9 ஆண்டுகள் சிறைவாசம் ….

Germany Aken இல் கடந்த 2019 ம் ஆண்டு ஜூலை 11  திகதியன்று பணப்பொறி ஒன்று வெடிவைத்து தகர்த்து கொள்ளை அடிக்கப்பட்டது .அன்றிரவே Brunssum இல் 25 முதல் 37 வயது வரையிலான ஆண்கள்  5 பேரை  காவல்துறை கைதுசெய்தனர் .

அவர்களை நேற்று Zwolle இல் உள்ள நீதிமன்றத்திற்கு கொண்டுவந்தனர் .அவர்களுக்கு 7 முதல் 9 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டார் . கிழக்கு நெதர்லாந்து பொது வழக்கு விசாரணை சேவை வெடிவைத்து தாக்குதல்கள் குறித்து சில காலமாக விசாரணை நடத்தி வருகிறது.

இதன் பின்னணியில், amsterdam மைச் சேர்ந்த 31 வயது நபர் ஒருவர் கண்காணிப்புக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டார். ஜூலை 11, 2019 அன்று, Amsterdam மை  சேர்ந்த அந்த நபர்  நான்கு ஆட்களை அழைத்துக்கொண்டு Brunssum மில் உள்ள ஒரு பண்டசாலைக்கு (Warehouse) சென்றார் . அதில் நான்கு ஆண்கள் ஜெர்மனிக்கு புறப்படுகிறார்கள், ஒரு 35 வயது நபர் பண்டசாலைக்கு பின் தங்கியுள்ளார். Akenஇல் , ஒரு பேரங்காடியில் உள்ள பணப்பொறியில் ஒரு திருடன் ஈடுபடுகிறான். பேரங்காடிக்கு  மேலே ஒரு அகதி முகாம் உள்ளது.

கொள்ளையர்கள் Brunssum திரும்பிய சில மணி நேரத்தின் பின் காவல்துறை  சந்தேக நபர்கள் ஐந்து பேரையும் பண்டகசாலையில்  கைது செய்தனர் .அவர்களிடம் 1,14,000 யூரோக்களுக்கு அதிகமான ரொக்கம் பறிமுதல்செய்யபட்டது . சோதனைக்குப் பின்னர், ஜூலை 9 ம் தேதி Landgraaf இல்  உள்ள பணப்பொறி  ஒன்றில் ஐந்து பேரும் வெடிவைத்து கொள்ளைஅடிக்க முயன்றது தெரியவந்தது .பணம் எதுவும் சிக்கவில்லை . Amsterdam  மை சேர்ந்த நபரின் வீட்டில் மேற்கொண்ட சோதனையின்போது வெடிபொருட்கள் சிக்கின .