அண்டை நாடுகளிலிருந்து அதிகமான மின்சாரம் இறக்குமதி செய்யவேண்டிய அவசியம் இருப்பதால்,2025 முதல், நெதர்லாந்து இயற்கை மின்சாரத்தை சார்ந்திருக்கும் . அதாவது அதிக காற்றாலை மற்றும் சூரிய ஆற்றல் மின்சாரம் பயன்படுத்தப்படும். TenneT டின் விநியோக அறிக்கையில் இது தெளிவாகிறது.
2025 வரை, நெதர்லாந்தில் உள்நாட்டு மின்சார உற்பத்தி உறுதி செய்யப்படுகிறது. 2025 முதல் வெளிநாட்டிலிருந்து அதிக மின்சாரம் இறக்குமதி செய்யப்படும் என்று TenneTடின் Maarten Abbenhuis கூறுகிறார். எவ்வாறாயினும் இயற்கை மின்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருக்கும், ஏனெனில் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தற்போது நிலையான இயற்கை மின்சாரத்திற்கான மாற்றத்தில் ஈடுபட்டுள்ளன. பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் உள்ள இயற்கை மின்சார நிலைமைகள் நெதர்லாந்தில் உள்ள இயற்கை மின்சார முறைகளுடன் ஒப்பிடப்படுகின்றன” என்று செய்தித் தொடர்பாளர் விளக்கினார்.
உள்நாட்டு உற்பத்தி குறைந்து வருவதற்கான காரணம் எரிவாயு மற்றும் நிலக்கரி மின் நிலையங்களை மூடுவதுதான். 2025 முதல் எரிவாயு எரி மின் நிலையங்களின் எண்ணிக்கை குறையும், 2030 முதல் நிலக்கரி இனி மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படாது. அதே நேரத்தில், மின்சார உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து இன்னும் அதிகமாக மின்சாரத்தை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்” என்று TenneT கூறுகிறது.