லிம்பேர்க்கில் உள்ள உணவகங்கள் கொரோனா நடவடிக்கையான ஒன்றரை மீட்டர் சமுதாயத்திற்கு அமைவாக தொழிலை எவ்வாறு தயார் செய்யலாம் என்பது பற்றி கடுமையாக யோசித்து வருகின்றனர்.
எடுத்துக்காட்டாக, முற்றங்களை சதுக்கத்தில் விரிவுபடுத்த ஆலோசனை செய்து வருகின்றனர் . ஆனால் இவர்களது புதிய திட்டமானது உணவக சட்டங்களுடன் ஒத்து போவதில்லை என்ற விமர்சனமும் உள்ளது. உணவகங்களை மீளத்திறவு செய்ய விரும்பும் தொழில்முனைவோருக்கு நகராட்சி தகுந்த தீர்வுகளை வழங்க வேண்டும் என்று Maastricht குடிமக்கள் கட்சி உறுப்பினர் Gabriëlle Heine நம்புகிறார்.
Maastricht Vrijthof இல் உணவகங்கள் ஒரு ஆண்டிற்க்கு 14,000 € அவர்களது முற்றங்களுக்கு வரி செலுத்துகிறார்கள் .