வியாழக்கிழமை இரவு (00:22 மணி) 21 மே முதல் ஞாயிற்றுக்கிழமை 24 மே வரை, PRORAIL Heerlenனில் உள்ள புகையிரத நிலையத்தில் வேலை பார்க்கவுள்ளது. இந்த வேலையின் போது, Heerlenனில் இருந்து எந்த புகையிரதமும் ஓடாது .பயணிகள் பேருந்துகளைப் பயன்படுத்தவேண்டும் .
மே 21 வியாழக்கிழமை 00:22 மணிக்கு Heerlen இல் இருந்து புறப்பட்டு Sittard செல்லும் வண்டியும் , 00:48 மணிஇக்கு Sittardஇல் இருந்து புறப்பட்டு Heerlen வந்தடையும் வண்டியும் ஓடாது . மே 22 வெள்ளிக்கிழமை, Sittard மற்றும் Hoensbroek (RS15) இடையே காலை 7:15 மணி வரை எந்த வண்டியும் இயக்கப்படாது.
Valkenburg மற்றும் Heerlen (RS18) புகைவண்டியும் ஓடாது . மே 22 வெள்ளிக்கிழமை முதல் மே 24 ஞாயிற்றுக்கிழமை வரை நாள் முழுவதும் Heerlen Woonboulevard மற்றும் Heerlen (RS18), Hoensbroek மற்றும் Kerkrade Centrum (RS15), Valkenburg மற்றும் Aachen HBF (RE18). கடுகதிரயில்கள் ஆகியன ஓடாது .