Pfizer மற்றும் BioNTech நிறுவனங்களின் முதல் கொரோனா தடுப்பூசிகள் சனிக்கிழமை நெதர்லாந்திற்கு வந்தடைந்தன . அவை Oss இல் உள்ள Vorstengrafdonk தொழில்துறை நிறுவனமான Movianto வில் சேமிக்கப்படுகின்றன. பெல்ஜிய மாகாணமான Antwerpen நகரில் உள்ள Puursஸில் உள்ள ஃபைசர் தொழிற்சாலையில் இருந்து இந்த தடுப்பூசிகள் வருகின்றன.
சுகாதார, நலன்புரி மற்றும் விளையாட்டு அமைச்சகம் Moviantoவை தேர்ந்தெடுத்துள்ளதாக Oss நகராட்சி முன்னர் தெரிவித்துள்ளது, ஏனெனில் இது “மருந்துகளை சேமித்து வைப்பதில் மற்றும் போக்குவரத்து செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு உயர் தகுதி வாய்ந்த நிறுவனம் ஆகும். தடுப்பூசி திட்டத்திற்கான சேமிப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பான அனுபவத்தை இந்நிறுவனம் கொண்டுள்ளது, ஏனெனில் இது காய்ச்சல் தடுப்பூசிக்கான வருடாந்திர பொருட்களை வழங்குகிறது என்று நகராட்சி தெரிவித்துள்ளது. ஐரோப்பிய மருந்து நிறுவனமான EMA கடந்த திங்கட்கிழமை Pfizer மற்றும் Bionteck நிறுவனத்திடமிருந்து தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது.
நெதர்லாந்தில் கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் தடுப்பூசி ஜனவரி 8 ஆம் தேதி போடப்படும் . மருத்துவ தொழிலாளர்கள் முதலில் அழைப்பைப் பெறுவார்கள். Movianto பிரெஞ்சு வணிக குடும்பமான Waldenனின் ஒரு பகுதியாகும், இது ஐரோப்பாவில் மருந்துத் தொழிலுக்கான மிகப்பெரிய கருவிகள் சேவை வழங்குநர்களில் ஒன்றாகும். Movianto பன்னிரண்டு நாடுகளில் செயலில் உள்ளது மற்றும் அங்கு இருபதுக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. Movianto Benelux ஸில் மூன்று Movianto நிறுவனகள் உள்ளன . Ossஸில் ஒன்று மற்றும் பெல்ஜியத்தில் இரண்டு கிளைகளும் உள்ளன.