முககவசம் அணிய சொன்ன சகபயணியை கடித்த மனித மிருகம் . பெல்ஜியத்தில் பேரூந்தின் உள்ளே முகமூடியை சரியாக அணியும்படி கேட்ட Merksem ஐ சேர்ந்த Robert Murphy என்பவரை இரண்டு தடவை கடித்த சகபயணி . வெள்ளிக்கிழமை பிற்பகல், antwerpen னை சேர்ந்த 56 வயது Robert Murphy ஒரு பேரூந்தில் பயணிக்கும்போது அவருக்கு பின்வரிசையில் அமர்ந்து பயணம் செய்த பயணி தும்மினார் .தும்மியபோது சளிதுளிகள் பறந்துவந்து முன்வரிசையில் பயணம்செய்த Robert Murphy யின் மொட்டைத்தலையில் விழுந்து சிதறியது .
இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த Robert Murphy தும்மிய பயணியை பார்த்து முககவசம் அணிந்து வந்தால் இப்படியான சம்பவங்களை தவிர்க்கலாம் என அறிவுரை கூறியுள்ளார் . தனது தவறை உணர்ந்த பயணி Robert Murphy இடம் மன்னிப்பு கோரினார். சில நிமிடங்கள் கழித்து, ஒரு ஜோடி பஸ்ஸில் ஏறி Robert Murphy க்கு நேராக அமர்ந்தனர் . அவர்களின் வாய் முகமூடிகள் அவர்களின் கன்னங்களின் கீழ் தொங்கின. Robert Murphy மற்றொரு கருத்தை தெரிவித்தார். உதாரணமாக, ஒரு வாய் முகமூடி எப்படி அணிய வேண்டும் என அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் .“வாய் முகமூடியை சரியாக அணிவது எப்படி என்பதை அவர்களுக்குக் காட்டினேன். தயவுசெய்து உங்கள் முகமூடியை சரியான முறையில் அணியுங்கள் என்று Robert Murphy, வலியுறுத்தினார் “அதற்கு அந்த மனிதன் மறுத்துவிட்டான்.”
பேரூந்தில் பயணம்செய்த சகபயணிகளும் சத்தம்போட்டதால் அந்த பயணி Robert Murphy ஐ கெட்டவார்த்தைகளால் திட்டினார்.இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த Robert Murphy அந்த பயணியை தனது பங்கிற்கு கெட்டவார்த்தைகளால் திட்டினார். திடிரென அந்த பயணி வெறிநாய் போல் கத்தியபடி Robert Murphy யின் மார்பில் இரண்டு தடவை கடித்தார் . சில பயணிகள் Robert Murphy ஐ கடித்த நபரை இழுத்து விலக்கி விட்டனர் அடுத்த இறக்கத்தில் , தம்பதியினர் பஸ்ஸிலிருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர். ஆனால் காவல்துறையினர் அவர்களைக் தேடி கைது செய்து .38 வயதான நாய்கடி வீரனுக்கு எதிராக அதிகாரப்பூர்வ வழக்கை உருவாக்கினார்கள் .
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகசென்ற Robert Murphy யின் கடி காயத்தைக் கண்ட செவிலியர் கண்களை அகலமாகத் திறந்து ஆச்சரியமாக பார்த்தனர் . ,, நான் இனிமேல் மோசமாக அணிந்திருக்கும் முகமூடியைப் பற்றி இனி யாரையும் பேச மாட்டேன் என்று என் மனைவிக்கு உறுதியளித்தேன். நான் பேரூந்திலோ அல்லது தண்டு அமிளூர்த்தியிலோ என்பாட்டுக்கு சிவனே என்று உட்கார்ந்து கொள்வேன்.என்றார் Robert Murphy