Hollandtamilan

மீன் தூண்டில் கயிற்றால் ஒரு காலை இழந்த அப்பாவி இளம்காகம்.

மீன் தூண்டில் கயிற்றால் ஒரு காலை இழந்த அப்பாவி இளம்காகம். Woudzicht இல் ஒரு பறவை ஆபத்தில் உள்ளதாக சனிக்கிழமை மாலை இரண்டு மணியளவில் De Lier தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது . அங்குள்ள ஒரு குடியிருப்பாளர் ஒரு இளம் காகம் ஒரு பிளம் மரத்தில் பலமணிநேரமாக உயரமாக அமர்ந்திருப்பதைக் கண்டார், பிற்பகலில் கடும் வெப்பத்துடன் இளம் காகம் வெயிலில் அதே கிளையில் அமர்ந்திருந்ததை கண்ட அந்த குடியிருப்பாளர் சந்தேகமடைந்தார் .


அதனால் அவர் உடனடியாக தீயணைப்பு படையினரை அழைத்தார். வந்தவுடன், அவர் ஒரு நீண்ட குச்சி மற்றும் கொக்கி மூலம் கிளையை வளைக்க முயன்றார், பின்னர் ஒரு மீன்பிடி தூண்டில் நூலில்  காகத்தின் கால் கிளையில்  சிக்கியிருப்பது உடனடியாகத் தெரியவந்தது . காகத்தின்  காலில் நூல் சுற்றத் தொடங்கியதால் காகம் உண்மையில் எங்கும் செல்ல முடியாதபடி தவித்தது . காகத்தை மீட்க  தீயணைப்பு வீரர்கள் சிறிது முயற்சி எடுத்தனர், இறுதியில்  கத்தரிகளின் உதவியுடன், கிளை வெட்டப்பட்டு பறவை காப்பற்றப்பட்டது.

ஆனால் மீன்பிடி தூண்டில் நூலால் காகத்தின் ஒரு கால் துண்டிக்கப்பட்டு வேதனையால் காகம் துடிதுடித்தது. காயமடைந்த பறவையை பறவை தங்குமிடம் de Wulp கொண்டு செல்ல விலங்கு ஆம்புலன்ஸ் பின்னர் அழைக்கப்பட்டது. மீன்பிடி தூண்டில் நூல் காரணமாக ஒரு பறவை சிக்கலில் சிக்கி காயமடைவது இது முதல் முறை அல்ல. திருந்தாத மனித இனம் …… இயற்கையில் உள்ள விலங்குகளுக்கு மரியாதை செலுத்துங்கள், உங்கள் கழிவுகளை நீங்களே  வீட்டிற்கு எடுத்துச் சென்று விலங்குகளை மகிழ்ச்சியாகவும், இயற்கையை மகிழ்ச்சியாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க  உதவுங்கள் . அது உங்களுக்கு ஒரு நல்ல உணர்வைத் தரும் .