Sittard-Geleen இல் உள்ள Zuyderland மருத்துவமனையில் ஒரு நபர் பாதுகாப்புப் பணியாளரின் முகத்தில் சனிக்கிழமை துப்பினார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர் . துப்பிய நபர் தனக்கு கொரோனா இருப்பதாக கூச்சலிட்டார் என்று Geleenனில் உள்ள உள்ளூர் காவல்துறை அதிகாரி தெரிவிக்கிறார்.
அந்த நபர் வழிப்போக்கர்களை நோக்கி ஆக்ரோஷமாக கூச்சலிட்டதாகவும் பாதுகாப்புக் காவலர் அவரை மருத்துவமனையை விட்டு வெளியேறச் சொன்னபோது, அவர் முகத்தில் துப்பினார் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர் . பாதுகாப்புக் காவலர் ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.