Hollandtamilan

பாரம்பரிய சைக்கிள் ஓட்டபந்தயம் (Rabo Ronde 2020)Heerlen இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது.

செப்டம்பர் 1 வரை வெளிப்புற  நிகழ்வுகளும் நடக்கக்கூடாது என்ற நெதர்லாந்து அரசின் கொரோனா சட்டங்களுக்கு அமைவாக Rabo Ronde Heerlen  அமைப்பு 2020 இல் அவர்களது ஓட்டபந்தயத்தை ரத்து செய்ய  முடிவு செய்துள்ளது. பந்தய அமைப்பாளர் Chris கூறுகையில் Tour De France இந்த ஆண்டு ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெறும்.

Rabo Ronde பந்தயத்தை செப்டம்பர் 25 இற்கு மாற்றினாலும் அது செப்டம்பர் 1 இற்கு அருகாமையில் உள்ளது . செப்டம்பர் 1இற்கு பின் நெதர்லாந்தில் வேறு புதிய சட்டங்கள் வரலாம் .அதனால் Rabo Ronde 2020 ஐ ரத்து செய்கிறோம் .என்று Chris கூறினார் .