கொரோனா நச்சுயிர் பரவுவதை கண்காணிக்க, மேலும் சோதனைகள் மிக முக்கியம்” என்று புதன்கிழமை மாலை பொது சுகாதார அமைச்சர் Hugo de Jonge கொரோனா நெருக்கடி குறித்து செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
முதியவர்கள் மற்றும் அடிப்படை நோய்கள் உள்ளவர்கள், சுகாதார ஊழியர்கள், இளைஞர் பயிற்சியாளர்கள்.போன்றோர் நோய் தொற்று அறிகுறி தென்பட்டால் தற்பொழுது பரிசோதிக்கபடுவார்கள். மே 6 முதல், ஆசிரியர்கள், குழந்தை பராமரிப்பு பணியாளர்களும் ,மே 11 முதல் சிகையலங்கார நிபுணர்களும் மே 18முதல் பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் ,காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரும் பரிசோதிக்கபடுவார்கள் .
ஜூன் 1 ஆம் தேதிக்கு பின் , நெதர்லாந்தில் உள்ள அனைவரையும் பரி சோதிக்க முடியும், “என்று DE Jonge கூறினார்.