கோடை விடுமுறைகள் நெருங்கிகொண்டிருக்கின்றன, மூலையில் இருப்பதற்கு நீண்ட காலம் இருக்காது. நமக்குப் பிடித்த விடுமுறை இடத்திற்குச் செல்வதற்கு முந்தைய நாட்களை விட , இப்போது நிலைமைகள் மாறியுள்ளன . இந்த கோடையில் நாம் எங்கு செல்லலாம் என பல டச்சு மக்கள் தடுமாறுகிறார்கள் .
தங்கள் சொந்த நாட்டில் விடுமுறையை தேர்வுசெய்வது நல்லது என்று பலர் எண்ணுகிறார்கள் . மீண்டும் சுற்றுலா செல்ல என்ன சாத்தியம் என்பது குறித்து தற்போது நிறைய ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன .
கொரோனா நெருக்கடி சுற்றுலா துறையை கடுமையாக தாக்கியுள்ளது. டச்சு பயணத் தொழில் அமைப்பு (ANVR )கோடையின் முடிவில் 8 முதல் 8.5 பில்லியன் யூரோக்கள் இழப்புக்கு அஞ்சுகிறது. ஒரு நேர்மறையான சூழ்நிலையில், முன்பதிவு மீண்டும் ஓரளவுக்கு வந்தால், இது 5.6 பில்லியனாக வரையறுக்கப்படலாம்.
ஐரோப்பிய மட்டத்தில், தங்குவிடுதிகளும் உணவகங்களும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அவர்களின் வருவாய் ஐம்பது சதவிகிதம் குறைந்து வருவதைக் காணமுடிகிறது. பயண நிறுவனங்களுக்கு இது எழுபது சதவிகிதம், மற்றும் விமான நிறுவனங்கள் மற்றும் கப்பல் நிறுவனங்களுக்கு இழப்பு தொண்ணூறு சதவிகிதம் என்று ஐரோப்பிய ஆணையம் சமீபத்தில் கணக்கிட்டது.