Hollandtamilan

நெதர்லாந்து  நகராட்சிகள் சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை பயன்படுத்தி தமது குடிமக்களை கண்காணித்து வருகிறார்கள்

நெதர்லாந்து  நகராட்சிகள் சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை பயன்படுத்தி தமது குடிமக்களை கண்காணித்து வருகிறார்கள் ..ஆனால்இதை அனுமதிக்கமுடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது ,  NHL Stenden Hogeschool en de Rijksuniversiteit Groningen ஆகியவற்றின் ஆராய்ச்சியின் அடிப்படையில் இத்தகவல் கிடைக்கபெற்றன.


கலவரங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்ற இடையூறுகள் குறித்து தகல்வல்களை  பெற நகராட்சிகள் முகநூல்  குழுக்கள், ட்விட்டர் ஆகியவற்றை கண்காணித்து வருகிறது . 95 சதவீத  நகராட்சிகள் தமது குடியிருப்பாளர்களை இணையவழியில் கண்காணித்து வருகின்றன . சில சந்தர்ப்பங்களில், நகர அதிகாரிகள் தனியார் முகநூல்  குழுக்களில் தவறான பெயர்களில் நுழைகிறார்கள்.   அரசு ஊழியர்கள் தாங்கள் சட்டத்தை மீறுவதாக பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டார்கள் என்று ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த விதிகள் மற்றும் நெறிமுறைகள் பொருந்தும் என்பதை பாதிக்கும் மேற்பட்டவர்களுக்குத் தெரியாது.   352 டச்சு நகராட்சிகளுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்களுக்கு 156 நகராட்சிகள் வழங்கிய பதில்களின் அடிப்படையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது .