Hollandtamilan

நெதர்லாந்து ஆயுதப்படை காவல்துறையினர் பல்லாயிரக்கணக்கான யூரோக்களைக் மகிழூந்தில் கண்டுபிடித்தனர் .

நெதர்லாந்து ஆயுதப்படை காவல்துறையினர் புதன்கிழமை மாலை Sittardஇல்  ஒரு மகிளூந்தை சோதனைக்காக  நிறுத்தியபோது   அதில் இருந்த இருவரிடமும் அடையாள ஆவணங்கள் இல்லாததால் கார் சோதனை செய்யப்பட்டு  57,000 யூரோக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அத்துடன் இரண்டு மறையீட்டு அலைபேசிகள் (crypto phones) உட்பட பல அலைபேசிகள்  மகிழூந்தில்  காணப்பட்டன. மறைகுறியாக்கப்பட்ட செய்திகளை அனுப்ப குற்றவாளிகளால் இவை பயன்படுத்தப்படுகின்றன. 26 வயதான ஜெர்மனியை சேர்ந்த நபரும்  31 வயதான Albania  மாறினர். அவர்கள் பணத்திற்கு நம்பத்தகுந்த விளக்கம் இல்லை மற்றும் பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.