நெதர்லாந்தில் 13 நகரங்களில் இளைஞர்கள் அரசின் இரவு ஊரடங்கு உத்தரவுக்கு எதிராக கலவரங்களில் ஈடுபட்டனர்.இதனால் Venlo, Roermond மற்றும் Sittard-Geleen ஆகிய இடங்களில் அவசர கால சட்டம் .
திங்கள்கிழமை மாலை Geleen மையத்தில் கலவரத்தில் ஈடுபட்ட பெரும்திரளான இளைஞர்களை கட்டுபடுத்த பெருமளவு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். கலகக்காரர்கள் அங்குமிங்கும் ஓடி , கூச்சலிட்டு ,பொதுஉடமைகளை சூறையாடினார்கள் . இதனால் காவல்துறையினர் தலையிட்டு கலவரக்காரர்களை அடித்து விரட்டினார்கள் .
Sittard-Geleen னில் திங்கள் 16:00 முதல் குறைந்தது பிப்ரவரி 1 வரை அவசர கால சட்டம் அமுலில் இருக்கும் . மேயர் Hans Verheijen கூறுகையில் கலவரக்காரர்களை அடையாளம் காண CCTV கண்காணிப்பு பயன்படுத்தப்படலாம் என்று அவர் கலகக்காரர்களை எச்சரித்தார் .