வியாழக்கிழமை காலை, Vijlen என்ற மலை கிராமத்தில் முதல் லிம்பர்க் பனி பெய்தது. Vijlen காட்டுக்குள் மதியம் சுமார் 3 சென்டிமீட்டர் பனி பெய்தது . சுமார் 200 மீட்டர் உயரத்தில் உள்ள Vijlen காட்டுக்குள் சுமார் மூன்று சென்டிமீட்டர்அளவு பனி பெய்து வெள்ளையாக காட்சியளித்தது .
Vijlen மலை கிராம மக்கள் இந்த வெள்ளை பனியை பார்த்து ரசித்து மகிழ்ந்தனர் . வியாழக்கிழமை முதல் வெள்ளி வரை இரவில் அதிக பகுதிகளில் 3 முதல் 8 சென்டிமீட்டர் வரை பனி அடுக்கு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் மீண்டும் அதிக உறைபனி வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது.