சுகாதார அமைச்சகம் சமீபத்திய வாரங்களில் சுகாதாரத்துக்காக 47.2 மில்லியன் வாய் முகமூடிகளை இறக்குமதி செய்துள்ளது. அவற்றில் 11 சதவீதம் தரமற்றது என்று நிராகரிக்கப்பட்டுள்ளன. முகமூடிகளில் பெரும்பாலானவை சீனாவிலிருந்து வந்தவை.
அவற்றில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமானவை பரி சோதனைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது .அத்தகைய சோதனை RIVM குழுவினரால் மேற்கொள்ளப்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், துகள்களைப் பிடிக்க வேண்டிய வடிப்பானில் குறைபாடுகள் இருந்தன.
மேலும் 3.9 மில்லியன் வாய் முகமூடிகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் வேறு பாவனைக்கு உபயோகிக்கலாமா என்று கேள்வி எழுந்துள்ளது . வாங்கிய வாய் முகமூடிகள் குறைபாடுள்ளவை என நிரூபிக்கப்பட்டால் ஏற்றுமதியாளரிடம் இருந்து பணத்தை மீட்க முயற்சி மேற்கொள்ளப்படும் .