Hollandtamilan

நெதர்லாந்தில் அவசரகால ஊரடங்கு உத்தரவு அமுல்

நேற்று, 21-01-21 அமைச்சரவை கொரோனா வைரஸின் பரவலுக்கு எதிரான பாதுகாப்பு  நடவடிக்கைகளின் தொகுப்பை அறிவித்தது, அதில் ஊரடங்கு உத்தரவு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்: இந்த ஊரடங்கு உத்தரவானது  இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பயன்பாட்டில் இல்லை. ஊரடங்கு உத்தரவு சனிக்கிழமையிலிருந்து அமுலுக்கு வருகிறது,

இரவு 9 மணி முதல் அதிகாலை 04.30 வரை இந்த ஊரடங்கு சட்டம் நடைமுறையில்  இருக்கும் .   அவசர தேவைகளுக்கு  மட்டுமே நீங்கள் வெளியே செல்ல முடியும், ஊரடங்கு உத்தரவின்  விதிவிலக்குகள்… இரவு வேலை செய்பவர்கள் …முதலாளியின் சான்றிதல் அவசியம் இருக்க வேண்டும் .  முதலாளியின் அறிக்கையை ஸ்மார்ட்போனிலிருந்து டிஜிட்டல் முறையில் காண்பிக்கப்படலாம்.

நாயை வெளியே அழைத்து செல்வதற்கும் ,வெளிநாடுகளுக்கு  பயணம் செய்வதற்கும், இறுதிச் சடங்கிற்குச் செல்வதற்கும் அல்லது தேவைப்படும் ஒரு நபர் அல்லது விலங்குக்கு உதவுவதற்கும் இது பொருந்தும்.  இரவு 9 மணிக்கு  பின் வெளியே நடமாட்டம் செய்பவர்களுக்கான விண்ணப்ப படிவங்கள் இந்த இணையத்தில் கிடைக்கும் .. https://www.rijksoverheid.nl/documenten/formulieren/2021/01/21/formulier-eigen-verklaring-avondklok